ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்துடன், நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு நாட்டுக்குகந்த அரசிலமைப்பு தேவையென ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன  தெரிவித்தார்.

 கடந்த நான்கரை வருடகால ஆட்சியில் நான்கு வருடங்களாக பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு வல்லுனர்கள் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அதனூடாக நாட்டுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் அக்குழு வட மாகாண மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கிய அதேவேளை, தெற்கு வாழ் மக்களிடையே வெறுப்புணர்வை பரவச் செய்ததாகவும் ஜனாதிபதி   தெரிவித்தார்.

இன்று (30) யாழ்ப்பாணம் முத்தவெலி நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் யாழ் மாவட்ட நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி  , தற்போது ஜனாதிபதி தேர்தல் பற்றி பரவலாக பேசப்பட்டாலும், இந்த குற்றத்தை சரிசெய்து கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2020ல் ஆட்சியை கைப்பற்றும் அரசாங்கம் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால் மேற் குறிப்பிட்ட முக்கிய கடமையை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றுகூடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

பாராளுமன்றம் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டியதுடன், தான் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 19வது திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் அதிகாரமுடைய மூன்று தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதியின் அதிகாரத்தில் ஒரு பகுதியை பெற்றுக்கொண்டு ஒரு பகுதியை மீதம் வைத்துள்ளதாகவும் பிரதமரின் அதிகாரத்தை அதிகரித்து சபாநாயகருக்கு மென்மேலும் அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மூன்று தலைவர்களுக்கு ஒரு நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாதென்றும் அதனால் நாடு சிக்கல்களுக்குள்ளாகுவதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

”நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டம் கடந்த 23ஆம் திகதி யாழ் மாவட்டத்தை மையமாகக்கொண்டு ஆரம்பமானதுடன், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் பல மக்கள் நலன்புரி நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மாவட்டத்தில் வாழும் ஆறு இலட்சத்து பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கிடையில் நான்கு இலட்சத்தி ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளதுடன் இங்கு முன்னெடுக்கப்பட்ட ஐயாயிரத்து தொல்லாயிரம் வேலைத்திட்டங்களுக்காக 50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

விழாவில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு விசேட வேலைத்திட்டமொன்றினை எதிர்வரும் மாதத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தார்.

யுத்த காலங்களில் பாதுகாப்புத்துறையினர் அபகரித்த காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 95 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு மீதமுள்ள காணிகளையும் அடுத்த மாதமளவில் முழுமையாக விடுவிப்பதற்கு தான் பணிப்புரை விடுப்பதாகவும் தெரிவி்த்தார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web