தற்போது தட்டுப்பாடு நிலவும் 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை அவசர கொள்முதல் முறையின் மூலம் கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டின் திறைசேரி செயலாளர் Janet Yellen தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளுக்கு அதிகமான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு தனபதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான இந்தியாவுக்கு எதிரான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு வசதியாக நிறுவப்பட்டுள்ள திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவப் பிரிவுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் போஷாக்கு குறைபாடு தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று(06) ஆரம்பமாகின்றது.

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் மேல் கொத்மலை, லக்ஷபான மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்னமும் திறக்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் டொலர்களைக் கொண்டு வீடுகளை வாங்குவோருக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி