அரசாங்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு வசதியாக நிறுவப்பட்டுள்ள திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவப் பிரிவுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.



கே.டி கமல் பத்மசிறி தலைமையிலான இக்குழுவில் என்.கே.ஜி.கே. நெம்மவத்தை, ஆர்.எச். திரு.ருவினிஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை துரிதமாக முன்னெடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக , ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினால் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளமை.

 திட்ட அலுவலகங்கள் / திட்ட முகாமைத்துவ பிரிவுகளில் நிறைவேற்றப்படக்கூடிய பணிகளை அந்தந்த அமைச்சு / திணைக்களம் / நிறுவனத்தினால் நிறைவேற்ற முடியுமா என ஆராய்தல்.

 திட்ட அலுவலகங்கள் / திட்ட முகாமைத்துவ பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என ஆராய்தல்.

 திட்ட அலுவலகங்கள் / திட்ட முகாமைத்துவ பிரிவுகள் தற்போது முன்னெடுத்து வரும் பணிகளின் தன்மை காரணமாக அவர்களே அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமா என ஆராய்தல்.

 திட்ட அலுவலகங்கள் / திட்ட முகாமைத்துவ பிரிவுகளில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக உள்ளதா என ஆராய்தல்.

 தற்செயலாக அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு ஏதேனும் விடயங்கள் உள்ளனவா என ஆராய்தல்.

குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை 15-11-2022 க்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி