செய்திகள்
Showing page 1097 of 1200 (17,991 articles)

கொரோனா தொற்றால் மரணித்தவர்களை பலாத்காரமாக எரித்தமைக்காக இழப்பீடு வழங்குக! வஜிர அபேவர்தன
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க கோரி, அனுமதி மறுக்கப்பட்டு பலாத்காரமாக எரிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் கல்முனை மக்கள் வங்கிக்கு பூட்டு!
கல்முனை மக்கள் வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஜந்து ஊழியர்களுக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


தமிழ் தேசியப்பரப்பில் ஒன்றாக செயற்படுவதற்கான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று நடைபெற்றுள்ளது!
தமிழ் தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்படுவதற்கு தேவையான ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சர்வதேச நீதிமன்ற விசாரணை கோரி வடக்கில் 1ஆம் திகதி மாபெரும் போராட்டம்!
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி, வடக்கில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை!
இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இலங்கையின் சிவில் சமூக அமைப்புகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பேலியகொட காவல் நிலையத்தில் வைத்து சட்ட த்துறை மாணவன் மிகார குணரத்ன மீது கொடூர தாக்குதல்!
பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் வைத்து சட்டத்துறை மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கில் நடந்து கொண்டிருக்கும் அரச ஆதரவுடனான நில அபகரிப்புக்கு எதிராக போராட்டம்! video
கிளிநொச்சி பளை பிரதேசத்தில் கரந்தையில் வசிக்கும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை உடைத்தெறிந்து காணிகளிலிருந்து அவர்களை விரட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றுள்ளது.

சஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக்குழுவிடம் கேள்வி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் முக்கிய சந்தேகநபர் தொடர்பில், நன்கு அறிந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படாமை குறித்து, இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களாக போராடி வரும் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்புகளை வழிநடத்தும் தாய்மார்களைத் தலைநகருக்கு அழைத்து துன்புறுத்துவதாக, இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


பௌத்தர்களின் உரிமைகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வர மாட்டேன்! நீதி அமைச்சர் அலிசப்ரி
நான் நீதி அமைச்சராக இருக்கும் வரை, எந்த வகையிலும் 2500 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இலங்கையில் பௌத்த சட்டத்தை ரத்து செய்வதோ அல்லது திருத்துவதோ எந்த நம்பிக்கையும் இல்லை என்றும், அவ்வாறு செய்ய வேண்டும் என்று நான் கனவுகூட கண்டதில்லை என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான்கானிடம் கோரிக்கை!
இலங்கையில் முன்னெடுக்கப்படும் கட்டாய தகன விடயத்தில் தலையீடு செய்யவும், ஜெனீவாவில் அரசாங்கத்தை ஆதரித்து, தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட வேண்டாம் எனவும் இலங்கை முஸ்லிம் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் பாகிஸ்தான் பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

செய்திகளை பகிர கூகுல் மற்றும் ஃபேஸ்புக் கட்டணம் செலுத்த வேண்டும்! அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்
கூகுல் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை அவுஸ்திரேலியா நிறைவேற்றியது.

பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள்! நடந்ததை சொல்கிறார் நா.உ.முஷர்ரப்
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) பிற்பகல் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.

