Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை!

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2021 • 9:57 AM

போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனைத்து போர்க்குற்றவாளிகளையும் நீதிக்கு முன் கொண்டுவர சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாங்கள் அழைப்பதாக, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
  • "மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தயாரித்த அறிக்கையில், அனைத்து போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • "சர்வதேச குற்றங்களுக்கு நீதி வழங்க சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று அவர் தனது 17 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
அனைத்து போர்க்குற்றவாளிகளையும் நீதிக்கு முன் கொண்டுவர சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாங்கள் அழைப்பதாக, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அருட்தந்தை மாரிமுத்து  சத்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை, பத்து ஆண்டுகளாக முன்வைத்த எந்தவொரு தீர்மானத்தையும் முன்னைய அரசாங்கங்களோ அல்லது தற்போதைய அரசாங்கமோ ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது செயற்படுத்தவில்லை என அவர் அருட்தந்தை சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரி சிவில் சமூகமும் மதத் தலைவர்களும் ஜனவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கங்கள் குறித்து அந்த சபை கவனம் செலுத்தவில்லை என தீவின் முன்னணி மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவரான அருட்தந்தை சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த வருடம் இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கூட்டுத் தீர்மானத்தில் இலங்கை சிவில் சமூக அமைப்புகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆரம்ப வரைபில் நாம் எதிர்பார்ப்பது அங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லை, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின், கடைசி நாட்களில் ஒரு இனப்படுகொலை நடந்ததாக குறிப்பிடும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், இராணுவத்தினர் இழைத்த போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை சர்வதேச அமைப்புகள் முன்வைத்த போதிலும், அது விவாதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
image1170x530cropped

"மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தயாரித்த அறிக்கையில், அனைத்து போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நேரத்தில், ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது வேறு பொருத்தமான எந்தவொரு செயன்முறையில் அதனை நிறைவேற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லை அவதானிக்க முடிகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக செயற்படும் அமைப்புகள் தயாரித்துள்ள ஆவணம் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என அருட்தந்தை  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்,  அண்மையில்  வெளியிட்ட அறிக்கையில்,  இலங்கை மீது "கடுமையான மனித உரிமை மீறல்” குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதோடு, போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

"சர்வதேச குற்றங்களுக்கு நீதி வழங்க சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று அவர் தனது  17 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், பெரிய அளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் வெளிநாட்டு பயணத் தடை போன்ற விடயங்களை மேற்கொள்ளுமாறு உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...