Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘SUZUKI மோட்டர்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி காலமானார்!

T

The Leader Desk

டிசம்பர் 27, 2024 • 2:14 PM

‘SUZUKI மோட்டர்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி காலமானார்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தாக்கத்தை ஏற்படுத்திய தொழிலதிபருமான ஒசாமு சுசுகி, தனது 94ஆவது வயதில் காலமானார்.
  • லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 25ஆம் திகதி உயிரிழந்ததாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.
  • ஆம் ஆண்டு சுசுகி குழும தொழிலில் சேர்ந்த அவர், 1978இல் நிறுவனத்தின் தலைவரானார்.
  • குறிப்பாக இந்த நிறுவனத்தின் மருட்டி 800 கார், இந்திய மற்றும் இலங்கைச் சந்தையில் பிரபலமான காராக மாறியது.
எழுத்து அளவு:

தாக்கத்தை ஏற்படுத்திய தொழிலதிபருமான ஒசாமு சுசுகி, தனது 94ஆவது வயதில் காலமானார்.

லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 25ஆம் திகதி உயிரிழந்ததாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் கெய்ரோவில் பிறந்த ஒசாமு, உலகப் புகழ் பெற்ற சுசுகி மோட்டார்ஸ் குழுமத்தின் நிறுவனர் குடும்பத்துடன் திருமணம் செய்த பின், அந்த தொழிலில் முன்னணி நபராக செயலாற்ற தொடங்கினார். 1958ஆம் ஆண்டு சுசுகி குழும தொழிலில் சேர்ந்த அவர், 1978இல் நிறுவனத்தின் தலைவரானார்.

1982ஆம் ஆண்டு அவர் இந்திய ஓட்டோமொபைல் சந்தையில் தடம் பதித்தது திருப்பு முனையாக அமைந்தது. இந்தியாவின் மருட்டி நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து, மருட்டி சுசுகி கார்களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். குறிப்பாக இந்த நிறுவனத்தின் மருட்டி 800 கார், இந்திய மற்றும் இலங்கைச் சந்தையில் பிரபலமான காராக மாறியது.

மத்தியதர குடும்பங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் இந்த கார் இருந்தது. அப்போது தொடங்கி தற்போது வரை, இந்திய கார் சந்தையில் சுசுகி நிறுவனத்தின் பங்களிப்பு முன்னிலையில் உள்ளது. தற்போதும், இந்திய கார் சந்தையில் மருட்டி சுசுகி, 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.

மறைந்த ஒசாமு சுசுகிக்கு. சோகோ என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். ஒசாமுவின் மறைவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பலவற்றின் தலைவர்கள், தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ஓட்டோமொபைல் துறையில் அவரது தொலைநோக்கு பார்வை, உலக அளவில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘SUZUKI மோட்டர்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி காலமானார்! | Tamil Leader | We Lead the Nation