Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அரசாங்கத்தின் 'PTA' சட்டத் திருத்த 'படத்திற்கு' எதிராக ஜெனிவாவில் மனு!

T

The Leader Desk

மார்ச் 4, 2022 • 2:55 AM

அரசாங்கத்தின் 'PTA' சட்டத் திருத்த 'படத்திற்கு' எதிராக ஜெனிவாவில் மனு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • 'அரசியல்வாதிகளுக்கு எதிரிகளைப் பழிவாங்குவதற்கு இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
  • கொழும்பு பௌத்தலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று(3) நடைபெற்ற மௌனப் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
  • எனவே அந்த சட்டத்தை நீக்காமல் அப்படியே வைத்திருப்பதற்காகத்தான் 'திருத்த சட்டம்" என்கிற கதைகள்.
எழுத்து அளவு:


'அரசியல்வாதிகளுக்கு எதிரிகளைப் பழிவாங்குவதற்கு இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

எனவே அந்த சட்டத்தை நீக்காமல் அப்படியே வைத்திருப்பதற்காகத்தான் 'திருத்த சட்டம்" என்கிற கதைகள்.

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா மனிதாபிமானமற்ற இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை திரும்பப் பெறுங்கள்!

கொழும்பு பௌத்தலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று(3) நடைபெற்ற மௌனப் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்கக் கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, சட்டத்தரணி சேனக பெரேரா மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையை இலக்காகக் கொண்ட ஒரு திரைப்படமாகும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசு கட்சி இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. சுமந்திரனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன், இன்று ஜெனிவாவில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின் போது பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்க உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கைதிகளைப் பாதுகாக்கும் குழு தனது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை இலங்கையில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிற்கு அனுப்பியிருந்தது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தலைநகரில் உள்ள செய்தியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...