Tamil Leader News
முக்கியம்
நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●
செய்திகள்

ஜப்பான் தொழில் வாய்ப்புகளில் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு கூடுதலான சந்தர்ப்பங்களை வழங்குங்கள் - அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானில் IRO விடம் கோரிக்கை

T

The Leader Desk

ஜூலை 21, 2023 • 3:19 PM

ஜப்பான் தொழில் வாய்ப்புகளில் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு கூடுதலான சந்தர்ப்பங்களை வழங்குங்கள் - அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானில் IRO விடம் கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார ஜப்பானின் IRO நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சுகா கட்சுகாய் (Suga Katsukai) அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
  • தூதுக்குழுவினர் அதற்கு சாதகமான பதிலை அளித்ததுடன், இலங்கையர்களின் தொழில் நுட்ப ஆற்றல் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளை ஜப்பானியர்கள் மிக உயர்வாக பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.
  • ஜப்பானின் IRO மற்றும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுக்கு இடையே இலங்கை இளைஞர்களை ஜப்பானில் உள்ளக தொழில் நுட்ப பயிற்சியாளர்களாக பணிபுரிய வழிநடத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2021 டிசம்பரில், கைச்சாத்திடப்பட்டது.
எழுத்து அளவு:

நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார ஜப்பானின் IRO நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சுகா கட்சுகாய் (Suga Katsukai) அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அமைப்பான IRO நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சுகா கட்சுகாய் (Suga Katsukai) உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் இன்று (21) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்து அமைச்சரைச் சந்தித்த போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
தூதுக்குழுவினர் அதற்கு சாதகமான பதிலை அளித்ததுடன், இலங்கையர்களின் தொழில் நுட்ப ஆற்றல் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளை ஜப்பானியர்கள் மிக உயர்வாக பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.
ஜப்பானின் IRO மற்றும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுக்கு இடையே இலங்கை இளைஞர்களை ஜப்பானில் உள்ளக தொழில் நுட்ப பயிற்சியாளர்களாக பணிபுரிய வழிநடத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2021 டிசம்பரில், கைச்சாத்திடப்பட்டது.
இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் திரு.ஏ.ஏ.எம்.ஹில்மி, பொது முகாமையாளர் திரு.டி.டி.பி.சேனநாயக்க, பிரதிப் பொது முகாமையாளர் (பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு) திரு.செனரத் யாப்பா மற்றும் IRO வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்லத் தயாராகவுள்ள தொழிலாளர் குழுவினரும் கலந்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...