ஐரோப்பா முழுவதும் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்து வரும் பின்னணியில், நிர்ணயிக்கப்பட்ட பதவி காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே ஐரோப்பிய மத்திய வங்கித் தலைமையிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை கிறிஸ்டீன் லகார்ட் எடுத்துள்ளமை சர்வதேச அரங்கில் பெரும் பேசற்பொருளாக மாறியுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) தலைவி கிறிஸ்டீன் லகார்ட்எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ பதவிக் காலம் 2027ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் முடிவடையவிருந்தது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஓராண்டும் எட்டு மாதங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ள இப் படிமுறை ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இராஜிநாமாவுக்கான உண்மையான காரணம் என்ன?
மத்திய வங்கித் தலைவர் பதவியை வகிப்பவர் எவரும் நேரடியாக அரசியல் செயற்பாடுகளில் தலையிட முடியாது. பிரான்ஸின் முன்னாள் நிதி அமைச்சரும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் தலைவருமான கிறிஸ்டீன் லகார்ட், எதிர்காலத்தில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய அரசியல் அரங்கில் மிகத் தீவிரமாகத் கருத்துக்களைத் தெரிவிக்கும் நோக்கத்துடனேயே இத்தீமானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு புதிய மத்திய வங்கித் தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.
ஐரோப்பிய அரசியல் இரண்டாகப் பிளவுபடுகிறது
லகார்ட்டின் ராஜிநாமா பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் அரசியல் களத்தில் கடும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. பிரான்ஸின் மரின் லெ பென்னின் (Marine Le Pen) தீவிர வலதுசாரிக் கட்சி இது நாட்டின் அதிபர் தேர்தலை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் தந்திரோபாயம் எனக் கூறுகிறது.
சுயாதீன பொருளாதார அவதானிகளின் கருத்துப்படி, ஐரோப்பிய விழுமியங்களைப் பாதுகாக்கும் மற்றும் வங்கியின் சுதந்திரத்தைப் பேணக்கூடிய தகுதியான தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்ள ஐரோப்பியத் தலைவர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் அவர் தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளார் என்பதாகும்.
நிதிச் சந்தையின் மீது தொடுக்கப்படும் தாக்கம்
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளமை ஐரோப்பாவிற்குள் பணவீக்க அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடன் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளமை சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவை நேரடியாகப் பாதித்துள்ளது.
எவ்வாறாயினும், சந்தை வீழ்ச்சியடையும் நிலை காணப்படவில்லை. நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்களான கிளாஸ் நட் (Klaas Knot) மற்றும் பப்லோ ஹெர்னாண்டஸ் டி கொஸ் (Pablo Hernandez de Cos) போன்ற அனுபவமிக்க பொருளாதார நிபுணர்களின் பெயர்கள் புதிய தலைவர் பதவிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையே அதற்குக் காரணமாகும்.
மேலதிகத் தகவல் மூல இணைப்புகள்:
-
செய்தி அறிக்கை (Reuters): ECB President Lagarde resigns at a time of mounting challenges for Europe


