Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘E-டிக்கெட்’ டிக்கெட் மோசடியில் மூவர் சிக்கினர்!

T

The Leader Desk

ஜனவரி 23, 2025 • 9:26 AM

‘E-டிக்கெட்’ டிக்கெட் மோசடியில் மூவர் சிக்கினர்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • திருகோணமலையில் ரயில்வே திணைக்களத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் 92 E-டிக்கெட்டுகளுடன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
  • அதேநேரம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கண்டியில் 37 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.
  • அவரிடமிருந்து 29 ரயில் E-டிக்கெட்டுகள் மற்றும் 130,670 ரூபா ரொக்கப் பணம் என்பனவும் மீட்கப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இதுவரை மொத்தமாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ரயில்வே திணைக்களத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் 92 E-டிக்கெட்டுகளுடன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

விசாரணையின் போது, ​​சந்தேகநபர் இ-டிக்கெட்டுகளை வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்க எண்ணியதாகத் தெரியவந்தது. இ-டிக்கெட் மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரும் மாத்தளை பிரதேசத்தில் நேற்று கைது கைது செய்யப்பட்டார்.

அதேநேரம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கண்டியில் 37 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 29 ரயில் E-டிக்கெட்டுகள் மற்றும் 130,670 ரூபா ரொக்கப் பணம் என்பனவும் மீட்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மலையக மார்க்கங்களூடான இ-டிக்கெட் மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பிரபல சுற்றுலாப் பாதைகளுக்கான இ-டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளில் வியக்கத்தக்க வகையில் விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஜனவரி 20 அன்று சிஐடியினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சில குழுக்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக 2,000 ரூபாவான டிக்கெட் விலை மறுவிற்பனை மூலமாக 16,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமையும் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...