Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

CID விசாரணை தொடர்பில் ரம்புக்வெல்ல தகவல்

T

The Leader Desk

டிசம்பர் 26, 2023 • 1:43 PM

CID விசாரணை தொடர்பில் ரம்புக்வெல்ல தகவல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
  • இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் இன்று (26) இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
  • இதன்போது ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் இன்று (26) இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சரிடம் உள்ள எழுத்து மூலமும் ஏனைய ஆதாரங்களும் விசாரணைகளின் வசதிக்காக அவசியமானது என கருதியதால் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்க தீர்மானித்ததாக அமைச்சர் கூறினார்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நெறிப்படுத்துவதற்காக தானாக முன்வந்து வாக்குமூலம் வழங்கியதாக குறிப்பிடுகின்றார்.

இதன்போது ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவார் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேற்படி அமைச்சின் மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க மற்றும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

CID விசாரணை தொடர்பில் ரம்புக்வெல்ல தகவல் | Tamil Leader | We Lead the Nation