Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

டிரான் அலஸுக்கு Asian Internet Alliance பதிலடி

T

The Leader Desk

ஜனவரி 24, 2024 • 6:02 AM

டிரான் அலஸுக்கு Asian Internet Alliance பதிலடி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கருத்துக்களை நிராகரித்துள்ள ஆசிய இணைய கூட்டமைப்பு, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்னெடுக்க முடியாது என்றும் இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டினை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த சட்டமூலத்தினை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது நாங்கள் வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை அமைச்சரின் உரை அங்கீகரிக்கவில்லை.
  • உலகின் மிகவும் வலுவான இணைய தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பே ஆசிய இணைய கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

கருத்துக்களை நிராகரித்துள்ள ஆசிய இணைய கூட்டமைப்பு, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்னெடுக்க முடியாது என்றும் இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டினை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

உலகின் மிகவும் வலுவான இணைய தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பே ஆசிய இணைய கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பு ஆசிய பிராந்தியத்தில் இணையம் தொடர்பான விடயங்களிற்கு தீர்வை காண ஊக்குவிக்கவும் முயல்கின்றது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களை நிராகரிக்கவும் பதிலளிக்கவும் விரும்புகின்றோம் என ஆசிய இணைய கூட்டமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜெவ்பெய்ன் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தினை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது நாங்கள் வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை அமைச்சரின் உரை அங்கீகரிக்கவில்லை. எங்கள் அமைப்பு பரிந்துரைகளை முன்வைத்திருந்ததுடன் சிங்கப்பூரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலத்தை தற்போதைய வடிவத்தில் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் இலங்கையின் மின் பொருளாதாரத்தில் பாயும் நேரடி முதலீடுகளும் பாதிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Google, Apple, Meta, X (Twitter), Amazon, Yahoo, Booking.com, FedEx, Pinterest போன்ற முக்கிய நிறுவனங்கள் Asian Internet Allianceஇல் உறுப்பினர்களாக உள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...