எமது நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும்,ஒரு நாடாக நாம் பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை

காட்டுகிறோமா என்பது சிக்கலாக உள்ளதாகவும், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் ஆரம்ப காலத்திலிருந்தே பெண்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தாலும்,நமது நாட்டில் ஆண்களை மையப்படுத்திய மனநிலையில் மிகவும் பிற்போக்குத்தனமாகவும், கூச்சத்தனமாகவும், கீழ்த்தரமாகவும் இத் தலைப்புகளை கிடப்பில் போடுவதற்கு செயல்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால்,பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறினாலும், நமது நாட்டில் பெண் தொழிலாளர் எண்ணிக்கை 32 சதவீதம் என்றும்,அது போதாதென்றும்,பெண்களுக்கு முறையான ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பெண்களின் உரிமைகள் வலுப்பெறுகின்றன என்றும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இது செயல்படுத்தப்படும் என்றும், பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக தனியான வேலைத்திட்டம் செயற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக கொழும்பு யசோதரா மகளிர் கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று (07) பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி ஒரு நல்லொழுக்கமுள்ள, மேம்பட்ட மற்றும் ஞானமுள்ள நபரை உருவாக்கும் போது சுகாதார கட்டமைப்பு அந்நபரின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதால்,கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் பாரிய புரட்சி ஏற்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், இதற்கு பழமைவாத பாரம்பரிய அபிவிருத்தி நோக்குகள் இல்லாமல்,நவீனமயமாக்கல் இல்லாத பின்தங்கிய நிலை நோக்குகள் கைவிடப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சில நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கலை எதிர்க்கின்றன,

ஸ்மார்ட் ரீதியிலான கல்வி ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்கி,ஸ்மார்ட் அரசாங்கங்களை கூட உருவாக்கினாலும், நமது நாட்டில் இவை வெறும் வார்த்தைகளுக்கு மட்டுமே சுருங்கியுள்ளதாகவும், இந்தியாவில் கூட e-government என்ற எண்ணக்கரு நடைமுறைப்படுத்தப்படும் போது, நமது நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு நாம் தயாராகும் போது அதை சிலர் எதிர்க்கின்றனர் என்றும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத்திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கலுக்கு எதிராக உள்ளன என்றும், ஊழலைக் குறைப்பதால் தனக்குக் கிடைக்கும் சலுகைகளை இழப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊழல் எனும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்,

எனவே,ஒரு நாடாக அபிவிருத்தியடைய வேண்டுமானால் முதலில் ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் என்றும், பிரிவினைவாதம்,பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டதைப் போன்று ஊழல் பயங்கரவாதமும் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 45 அரச பாடசாலைகளுக்கு 414 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web