எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை
உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (19) மாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு தொடருந்தை மறித்து முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்றொழிலாளர்களுடன் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் எழுந்து சென்றனர்.
கூட்டத்தை விட்டு வெளியே வந்த கடற்றொழிலாளர்கள் திட்டமிட்டபடி இன்று(19) தொடருந்து மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.