மட்டக்களப்பு  ஏறாவூர் பகுதியில் புகையிரதத்தில் முச்சக்கரவண்டியோன்று மோதுண்டதில்  ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்

பாதுகாப்புக் கடமையில்லாத நிலையில் இடம்பெறும் விபத்துக்கள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்று பி.ப 12.15 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே  முச்சக்கர வண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் மிச்நகர் பகுதியில் ரயில் கடவையில் வீதியை கடக்க முயன்ற போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய  03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரஹமான் றமீஸ் என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மோற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அந்தப் பிரதேச மக்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த  பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் பல விபத்துக்கள் இடம் பெற்று  பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும்   இதற்கு சரியான பாதுகாப்பினை அரசாங்கமும் அரசியல்வாதியும் மேற்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி