நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண தொடரின் 5 வது போட்டியில் 10 விக்கெட்டுகள்

வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. முதலில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி களம் இறங்கிய நேபாள அணி 48.2 ஓவர்களில் 230 ஓட்டங்கள் குவித்தது.

நேபாள அணி சார்பில் ஆசிப் ஷேக் 58 ஓட்டங்களும், சோம்பால் கமி 48 ஓட்டங்களும் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

231 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 23 ஓவர்களில் 145 ஓட்டங்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து ரோகித் சர்மா 49 பந்துகளில் அரைசதம் கடக்க, சுப்மன் கில் 47 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 14 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி 100 ஓட்டங்களை கடந்தது.

இதன்பின் இருவரின் அதிரடியும் அடுத்த கட்டத்திற்கு செல்ல, இறுதியாக இந்திய அணி 20.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 147 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 74 ஓட்டங்களும் சுப்மன் கில் 67 ஓட்டங்களும் சேர்த்தனர்.

இதன் மூலம் இந்திய அணி டக்வத் லுவிஸ் விதிப்படி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்றுக்கும் இந்தியா முன்னேறியுள்ளது.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி