தெரிவித்துள்ளார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என அந்த கடிதத்தில் சாலே மேலும்

கூறியுள்ளார்.

இந்த ஆவணப்படம் தொடர்பில் செனல் 4 பிள்ளையான் மற்றும் ராஜபக்ச குடும்பத்தாரின் கருத்துக்களை கோரியபோதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால், நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்களை உள்ளடக்கிய, இலங்கையின் கொலைக்களம் (Sri Lanka’s Killing Fields) என்ற ஆவணப்படம், கடந்த 2011ஆம் ஆண்டு ஜுன் 14ஆம் திகதி செனல் 4 வெளியிட்டிருந்தது. எவ்வாறெனினும், இலங்கை பாதுகாப்புப் படையினர் மீதும், அரசாங்கத்தின் மீதும் குறித்த ஆவணப்படத்தின் ஊடாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

இந்த ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி "இலங்கையின் கொலைக்களம்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" (Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished) என்ற தலைப்பில் 2012, மார்ச் 14 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்