அங்குருவத்தோட்ட, ஊருதுடுவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையை படுகொலை செய்த சம்பவம்

தொடர்பில் குற்றசம்சாட்டப்பட்ட சந்தேகநபரின் சடலம் சிறைச்சாலையினுள் மீட்கப்பட்டுள்ளது.

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாயான சந்தேக நபரின் சடலம் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வரகாகொட சல்கஸ்வத்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் அங்குருவத்தோட்ட - ஊருதுடுவ பிரதேசத்தில் வசித்த 24 வயதான வாசனா குமாரி மற்றும் 11 மாத குழந்தையான தஸ்மி திலன்யா ஆகியோரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி