மகாராஷ்டிராவில் 4 பெண் குழந்தைகளுக்கு தந்தையான நபர் ஒருவர் ஆண் குழந்தை ஒன்று வேண்டும் என்ற விருப்பத்தில் ரயில்

நிலையத்தில் இருந்து சிறுவன் ஒருவனை கடத்த செல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் சிறுவனை கடத்திய நபர்

மகாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த கச்ரு வாக்மரே என்ற 32 வயது நபர் ஒருவர், திங்கட்கிழமை மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறைக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்த 4 வயது சிறுவனை தந்திரமாக கடத்திச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறுவனை காணவில்லை என்று குழந்தையின் பெற்றோர் ரயில் நிலைய பொலிஸ் அதிகாரியிடம் புகார் அளித்தனர், இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் கச்ரு வாக்மரே சிறுவனை அழைத்து செல்வதை கண்டுபிடித்தனர்.

father-of-4-girls-kidnaps-boy-in-mumbai-kalyan-train: ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில்..!மும்பையில் சிறுவனை கடத்திய 4 பெண் குழந்தைகளின் தந்தை

இதற்கிடையில் கச்ரு வாக்மரே கல்யாண் நகரில் சுற்றி திரிந்து சிறுவனுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வாங்கி கொடுத்துவிட்டு, 350 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஜல்னா-வுக்கு செல்வதற்காக புறப்பட தயாராக இருக்கும் ரயிலில் ஏறுவதற்கு மீண்டும் ரயில் நிலையம் வந்துள்ளார்.

அப்போது ரயில் நிலைய பொலிஸார் சிறுவனை கடத்திய கச்ரு வாக்மரே-வை மடக்கி பிடித்து கைது செய்தனர், மற்றும் சிறுவனை பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

father-of-4-girls-kidnaps-boy-in-mumbai-kalyan-train: ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில்..!மும்பையில் சிறுவனை கடத்திய 4 பெண் குழந்தைகளின் தந்தை

ஆண் குழந்தை ஒன்று இல்லையே

இதையடுத்து கச்ரு வாக்மரே-விடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவருக்கு 4 பெண் குழந்தைகள் இருப்பதும், அவர் தினக்கூலியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

அத்துடன் தனக்கு பிறந்த குழந்தைகள் நான்கும் பெண்கள் என்பதால் ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் கடத்தலில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி