கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் மூலம் உலகின் மிகப் பெரிய மற்றும்
நீளமான சிறுநீரகக் கல்லை அகற்றி வைத்தியர்கள் சாதனைப்படைத்துள்ளனா்.

இது கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைவர், சிறுநீரக மருத்துவ நிபுணா், லெப்டினன்ட் கேணல் சுதர்ஷனின் தலைமையில் கேப்டன் (வைத்தியா்) டபிள்யூ.பி.எஸ்.சி. பதிரத்ன மற்றும் வைத்தியா் தமன்ஷா பிரேமதிலக்க ஆகியோரால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேணல் (வைத்தியா்) யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் கேணல் (வைத்தியா்) சி.எஸ். அபேசிங்க ஆகியோர் இந்த அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து நிபுணர்களாக கடமையாற்றியுள்ளனர்.

கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் கடந்த ஜூன் மாதம் 01 ஆம் திகதி இராணுவ வைத்தியர்களினால் சிறுநீரக கல் அகற்றப்பட்டதுடன், இந்த சிறுநீரக கல் 13.372 சென்றி மீற்றா் நீளமும் 801 கிராம் நிறையும் கொண்டது.

சத்திர சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்ட சிறுநீரகக் கல், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பி.ஏ.சி. பெர்னாண்டோ, யு.எஸ்.பி மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைவர் லெப்டினன்ட் கேணல் (வைத்தியா்) கே. சுதுர்ஷன் ஆகியோரால் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிற்கு காண்பிக்கப்பட்டது.

கின்னஸ் உலக சாதனைகளின் படி, உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான சிறுநீரக கல் 2004 இல் இந்தியாவில் அறுவை சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் நீளம் 13 சென்றி மீற்றா் ஆகும்.

அதிகளவு நிறையுடன் கூடிய சிறுநீரக கல், 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் நிறை 620 கிராம் ஆகும்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி