கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள்
நாளை (15) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 39 மதிப்பீட்டு மையங்களில், 519 மதிப்பீட்டு பணிக்குழுக்களுடன் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை 4 ஆம் திகதி வரை 18 நகரங்களை மையமாக கொண்டு மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாடசாலைகளை ஓரளவுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் உயர்தர ஆங்கில வழி விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி