இராஜதந்திரத்தின் 75 வருடங்களைக் குறிக்கும் வகையில், இலங்கையின் சிம்பொனி இசைக்குழுவினால், 2023 ஜூன் 02ஆந் திகதி, வெள்ளிக்கிழமையன்று, லயோனல் வென்டடில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பாரம்பரிய இசை மாலையை நடாத்தியது.

 

 

 

'சர்வதேச நல்லிணக்கம்' நிகழ்வானது, இலங்கைக்கு அருகிலுள்ள மற்றும் தொலைதூர நாடுகளுடனான நீண்டகால மற்றும் நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த கிழக்கு மற்றும் மேற்கத்திய பாரம்பரியங்களின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் ஓர்கெஸ்ட்ரா இசையின் கலவையை காட்சிப்படுத்தியது.

 

 

 

கொழும்பில் உள்ள ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் நரம்பியல் சத்திரிகிச்சைப் பிரிவில், சிறுவர்களுக்கான நரம்பியல் சத்திரசிகிச்சைக்கான அவசர உபகரணங்களுக்கான நன்கொடைகளை ஆதரிப்பதற்கான ஒரு பணியுடன் கூடிய கொண்டாட்டமாக இந்த இசை நிகழ்ச்சி அமைந்திருந்தது.

 

 

 

லெராய் அண்டர்சனின் பளபளப்பான 'பக்லர்ஸ் ஹாலிடே' மற்றும் டிரம்பெட் ட்ரையோ, பாவோ யுவான்காயின் தூண்டுதலான 'மலர்களின் உரையாடல்', விஸ்வநாத் லௌஜியின் சின்னமான 'டான்னோ புடுங்கே', எட்வர்ட் எல்கரின் பிரம்மாண்டமான 'ஆடம்பரம் மற்றும் சூழ்நிலை மார்ச் இல. 4', ஏ.ஆர். ரஹ்மானின் ஏக்கமான 'காதல் ரோஜாவே' மற்றும் கிழக்கு மற்றும் மேற்கிலிருந்து பல இசைகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. ஜோர்ஜஸ் பிஜெட்டின் 'கார்மென்' இலிருந்து 'ஹபனேரா' மூலம் சோப்ரானோ டிமித்ரி குணதிலக்க பார்வையாளர்களை மயக்கினார்.

 

 

 

கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகள் கச்சிதமாக ஒன்றிணைந்து, இசையின் உலகளாவிய மொழியின் மூலம் தடைகளைத் தாண்டி நல்லிணக்கத்தை அடைவதற்கான மனிதகுலத்தின் திறனுக்கு இந்தக் கச்சேரி சான்றாக அமைந்தது.

 

 

 

இலங்கையின் சிம்பொனி இசைக்குழு தெற்காசியாவின் பழமையான இசைக்குழுக்களில் ஒன்றாவதுடன், நிகழ்வின் மரியாதை மற்றும் அது ஊக்குவிக்க விரும்பும் மனிதாபிமான நோக்கத்திற்காக, ரிட்ஜ்வே சீமாட்டி மருத்துவமனை நரம்பியல் சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு அனைத்து பங்களிப்புக்களையும் செலுத்தும் நோக்கில் கௌரவ அடிப்படையில் இந் நபழ்வு இசைக்குழுவினால் நிகழ்த்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக கொழும்பில் உள்ள இராஜதந்திரத் தூதரகங்கள் மற்றும் நலன் விரும்பிகளின் நல்கிய பங்களிப்புக்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பாராட்டுகின்றது.

 

 

 

இந்த நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, சுகாதார அமைச்சர் கலாநிதி. கெஹலிய ரம்புக்வெல்ல, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, இராஜதந்திரத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கொழும்பில் உள்ள ஏனைய சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், கொழும்பில் உள்ள கௌரவ தூதரகங்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கையின் சிம்பொனி இசைக்குழுவின் நிர்வாகம் மற்றும் ஏனைய விஷேட விருந்தினர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

 

கொழும்பு

 

 

 

2023 ஜூன் 04

 

 

........................................

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி