கேரள கஞ்சா ஒரு கிலோவும் பத்து கிராமை தம் வசம் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரியொருவரை இம்மாதம் 15
ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் நேற்று (3) உத்தரவிட்டுள்ளார்.

முள்ளிப்பொத்தானை- 10ஆம் கொலனியில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலையில் அனுராதபுர சந்தியில் இருந்து முச்சக்கர வண்டியில் கேரளா கஞ்சா பொதியை ஏற்றிக்கொண்டு சென்ற போதே 96ஆம் கட்டை பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் வைத்துக் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்போபுர பொலிஸ் அதிரடிப் படையினருக்குக் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

சந்தேக நபரை தம்பலகாமம் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் (வாசஸ்தல்) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

-திருகோணமலை நிருபர் பாருக்-

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி