போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை
சமர்ப்பித்துள்ளார்.

தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகள் சட்டவிரோதமாக தன்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி