இளைஞர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.

அதன்படி, பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை, தெமோதர பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகள் இந்த இரு பெண்களையும் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாளை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களைத் தவிர, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, தென்கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 51 பேரிடம் பண மோசடி செய்து இரண்டரை மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த தென்கொரிய நபர் ஒருவர் கொட்டாவ பகுதியில் வைத்து இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த நபர் அலங்கார மீன் ஏற்றுமதி தொடர்பான தொழில் தொடங்க இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உரிய சட்ட அனுமதி கிடைக்காததையடுத்து, தென்கொரியாவில் இளைஞர்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை ஏமாற்றியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்குரிய தென்கொரிய பிரஜை நாளை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி