பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவரை களனி பிரிவு குற்றப்
புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சோதனையிடச் சென்ற போது மற்றுமொரு பெண் அந்த இடத்திற்கு வந்து பொலிஸ் உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் சந்தேக நபர்கள் இன்று (25) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி