சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி

ரஹீமிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் 3 கிலோ 397 கிராம் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இதன் சந்தை பெறுமதி சுமார் 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினரின் பயணப் பொதியில் இருந்த கைப்பேசிகளை சுங்க பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதில், 91 ஸ்மார்ட் கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதன் சந்தை பெறுமதி 4.2 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி