உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் சடலத்தை மீட்பதற்குத் தேவையான பணிகளை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்

புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்வார்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, சடலம் எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்படி, தினேஷ் ஷாப்டரின் சடலம் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் பொரளை பொலிஸார் விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நீதவான், ஏனைய நிபுணர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் பங்களிப்புடன் சடலம் மீட்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி