பம்பலப்பிட்டி கடற்பரப்பில் முறையான அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்களை கொழும்பு

குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், 5 மோட்டார் சைக்கிள்களும் அந்த பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பம்பலப்பிட்டி கடல் மார்க்கத்தில் மோட்டார் சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று அதிகாலையில் டிக்டொக் மூலம் இளைஞர்கள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சமூக ஊடக தளமான TikTok இல் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை எவ்வாறு ஓட்டுவது என்பதைக் காட்டும் வீடியோவையும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.

வீதியில் செல்லும் வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் வீதியில் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 17-23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி