புதிய மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.சம்பந்தப்பட்ட மசோதாவை தயாரித்த பிறகு, அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு முகவர்கள் மற்றும் மறுசீரமைப்பு நிபுணர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி