ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று (06) அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று அதிகாலை 2.30 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் கொள்கலன் ஊர்தி, வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காயமடைந்த குறித்த கொள்கலன் ஊர்தியின் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டிலுள்ளவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தினால், குறித்த டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  • மலையக நிருபர் கிரிஷாந்தன்-

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி