ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு சேர்பியா. இந்நாட்டின் தலைநகர் பல்கிரெடி மாகாணம் விரகார் மாவட்டத்தில் பாடசாலை ஒன்று

உள்ளது.

இந்த பாடசாலையில் இன்று வழக்கம் போல மாணவ - மாணவிகள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பாடசாலையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினான்.

ஆசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது அந்த மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

மேலும் ஒரு ஆசிரியர் 6 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய கேகே என்ற மாணவனை கைது செய்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி