கேகாலை, அவிசாவளை பிரதான வீதியின் ருவன்வெல்ல, வெந்தல பிரதேசத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பயணித்த சொகுசு ஜீப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, ​​இராஜாங்க அமைச்சர் உட்பட 5 பேர் வாகனத்தில் இருந்தனர்.

இந்த விபத்தில் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சிறு காயம் காரணமாக இராஜாங்க அமைச்சர் தற்போது கரவனெல்ல ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஜீப் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி