இன்று (14) புத்தாண்டை முன்னிட்டு உறவினர் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி திடீரென

தீப்பற்றி எரிந்துள்ளது.

தீயினால் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் அகலவத்தை பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்