மன்னார் - இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்புப்

பிரிவினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை பகுதியில் இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1 லட்சத்து 11 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபா என தெரிய வந்துள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வந்து குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் பொருட்கள் யாவும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கடத்தல் பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டதுடன் இந்த நடவடிக்கையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்