சுற்றுலா அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக

அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான 15 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஓய்வளிக்கப்பட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்தெனிய மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட நிலையில், விக்கட் காப்பாளர் சதீர சமரவிக்ரம மற்றும் சுழற்பந்து வீச்சாளர் துஷான் ஹேமந்த ஆகியோர் புதிய வீரர்களாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், நிறைவடைந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பெயரிடப்பட்ட நிரோஷன் டிக்வெல்ல, ஓஷத பெர்னாண்டோ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை.

மேலும், வேகப்பந்து வீச்சாளர்களான கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோருக்கும் இந்தப் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக அயர்லாந்து அணி கடந்த வாரம் நாட்டை வந்திருந்ததுடன் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி