மில்லேணியம் செலேன்ஜ் ஒப்பந்தத்திற்கு (MCC) அனுமதியை வழங்கியதன் ஊடாக இலங்கைக்கு கிடைக்கவுள்ள 480 மில்லியன் டொலர் நிதி இந்நாட்டிற்கு பாதகமானது

எனத் தெரிவிப்பது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் தமது தரப்புக்கு அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்கே என்றும், இது இலங்கைக்கு கிடைக்கப் போகும் முதலாவது சந்தர்ப்பம் அல்ல என்றும், சந்திரிகா பண்டாரநாயக்கா அரசாங்க சமயத்திலும் விவசாய சந்தை போட்டித்தன்மையினை அதிகரித்துக் கொள்வதற்காக (பொருளாதார நிலையங்களை அமைப்பதற்காகா) இது உதவியாக அமைந்நததாகவும் முன்னாள் மத்திய வங்கியின்  பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளிவ். ஏ. விஜேவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் மக்களுக்கு விளங்கக் கூடிய சிங்களத்தில் விடயங்களைத் தெளிவு படுத்துவதற்கு தற்போதைய அரசாங்க அரசியல்வாதிகள் தவறியுள்ளதன் காரணமாக இந்த வழங்கள் தொடர்பில் தவறான கருத்துக்கள் தோன்றியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தான் இந்த ஒப்பந்தத்திற்கு போக்குவரத்து பிரிவுக்கான திட்டத்தைத் தயாரிப்பதன் ஊடாக இணைந்து கொண்டதாகவும், இதன் ஊடாக என்ன செய்ய வேண்டும்?, யாருக்காக? போன்ற எந்த நிபந்தனைகளுக்கு தமக்கு முகங்கொடுக்க நேரிடவில்லை என்றும், “சஹசர” என்ற திட்டத்தின் ஊடாக இதன் மூலம் இலங்கையின் போக்குவரத்து அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு 330 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாகவும், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதானி பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.

MCC வழங்கள் வறுமையினை ஒழிப்பது தொடர்பான அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் ஊடாக கிடைப்பதோடு,  இது இலங்கையினால் விண்ணப்பிக்கப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் கிடைக்கப்பெற்ற வழங்களாகும் என்பதோடு,  இதன் ஊடாக நாம் செயற்பட வேண்டிய திட்டங்கள் கூட எமது நாட்டு நிபுணர்களால் தயாரிக்கப்பட்டவை என்பதால் அதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எந்தப் பாதிப்புக்களும் இடம்பெறப் போவதில்லை என்றும் பேராசிரியர் சிரிமல் அபேவர்தன் கூறினார்.

இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய ஆவணங்களை தான் மிக ஆழமாக ஆய்வு செய்ததாகவும், இதனால் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு எந்தவித பாதிப்புக்களும் இடம்பெறப் போவதில்லை என தன்னால் உறுதியாகக் கூற முடியும் என்றும், நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வாறாக வழங்களைப் புறந்தள்ளிவிடாது அதனை நாட்டு மக்களின்  முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

(ராவய - விந்தியா கமகே)

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி