ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்
வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னமும் தீர்மனிக்கப்படவில்லை என்றும், அடுத்த வாரத்தில் அதனைத் தெரிவிக்க முடியும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறினார். நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசாவின் கொள்கை பிரகடணத்தை வாசிப்பதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான சீ. வீ. விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்காக 13 கோரிக்கைகளை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்களின் கவத்திற்குக் கொண்டு வரப்பட்ட போது கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தையின்றி உடனடியாக பதிலை வழங்கி அது நிராகரிக்கப்பட்டதோடு, ஏனையவர்களிடத்திலிருந்தும் இதற்கான பதில் கிடைக்காத காரணத்தினால் சிறுபான்மையினர் தொடர்பில் உணர்வு பூர்வமற்ற சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்கை அளிப்பது பயனற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றும், வாக்களிப்பை பகிஷ்கரிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் கூறும் போது தெரிவித்துள்ளார்.