தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வடக்கில் தெரிவித்த பகிரங்க விடயத்தை அவரது
தேர்தல் பிரசார அமைப்பு தெற்கில் மறைத்துள்ளது.
அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளை விடுவிப்பதாக் கூறியிருந்தார்.
“நாம் எல்.டி.டி.ஈ உறுப்பினர்கள் 13,000 பேரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளோம். 5000க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளுள் 274 பேரைத் தவிற ஏனைய அனைவரையும் நாம் விடுதலை செய்திருக்கின்றோம். நான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் மீதமான அனைவரையும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதாக நான் கடந்த திங்கட்கிழமை யாழில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினேன்” என கோட்டாபய ராஜபக்ஷவின் டுவீட்டர் வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூற்றை சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் இதுவரையில் காணக் கிடைக்கவில்லை.