தமது கட்சிக்கும்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டு) கட்சிக்குமிடையில் 2019 ஒக்டோபர் 10ம் திகதி கொழும்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு

ஒப்பந்தத்திற்கு அமைய ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு பெரும் அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 12ம் பிரிவுக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடம்பெறும் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டமைப்பு மூலம் போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியலில் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு அக்கட்சி 2018ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளைக் கவனித்திற்கொண்டு போதுமான மற்றும் நியாயமான பிரநிதித்துவத்தை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை இதுவரையில் இரகசியமாக வைத்துக் கொள்வதற்கு இரு தரப்பினதும் பிரதானிகளும் இணங்கியிருப்பது அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு பாதகமான இவ்வாறான அநீதியான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததாலாகும் என அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

அவ்வாறு 2018ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்கு அமைய எதிர்காலத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு வழங்கப்படும் அளவு தீர்மானிக்கப்படுவது பெரும் அநீதியானது என்றும், அதன் ஊடாக கட்சி கூடிய சீக்கிரத்திலேயே இல்லாமல் போய்விடும் என்றும் எம்மிடம் தகவல்களை வழங்கிய அந்த மூத்த பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி