நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சரிவினை தொடர்ந்து அத்தியவசிய மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் என்றுமில்லாதவாறு பல

மடங்காக அதிகரிக்கப்பட்டன.

இந் நிலையில் தற்போது அத்தியவசியமான உணவு பொருட்களின் விலைகள் அரசாங்கம் படிப்படியாக குறைத்து வருகிறது.

பொருளாதார நெருக்கடியில் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உணவு பொருட்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேட்க தக்க விடயம். இது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் எனினும் நூறு சதவீதத்தில் அதிகரித்து விட்டு 10 சதவீதத்தில் குறைப்பதனால் மக்களின் வாழ்க்கை பழைய நிலைக்கு மாறாது. மக்களின் வாழ்வு நிம்மதியாகவும் வளமுடனும் வாழ்வதற்கு பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்பட வேண்டும். இல்லா விட்டால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் மீள முடியாது என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதே நேரம் குறைக்கப்பட்ட பொருட்கள் சதொச விற்பனை நிலையங்களில் மாத்திரம் பெற்றுக்கொடுக்கப் படுவதாகவும் மலையகத்தில் பெரும் பாலான பகுதிகளில் சதொச விற்பனை நிலையங்கள் இல்லை என்றும் இதனால் குறைக்கப்பட்ட பொருட்களை கூட பெற முடியாத நிலையில் பெரும் பாலான மக்கள் இருப்பதாகவும் எனவே அனைத்து மக்களும் நன்மை பெறக்கூடிய வகையில் இந்த விலை குறைப்பு இடம் பெற்றால் மாத்திரமே அனைத்து மக்களும் நன்மையடையலாம் என மேலம் சிலர் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சிலர் கருத்து தெரிவிக்கையில்,

மின்சாரம், தண்ணீர், பொது போக்குவரத்து கட்டணம், எரிபொருள் உள்ளிட்ட பல அத்தியவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் அவற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெற வில்லை. சம்பளம் முழுவதும் அதனை செலுத்துவதற்கே செலவிட வேண்டி உள்ளது. எனவே இந்த நெருக்கடியில் இருந்து மீள்வாதற்கு அதிகரிக்கப்பட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி