தன்னுடன் நேருக்கு நேர் நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவினால்

விடுக்கப்பட்ட சவாலை நிராகரித்து மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தப்பிச் செல்வது ஆச்சரியமான விடயமல்ல என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அந்த ட்வீட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவாது,

“அன்று பிரபாகரன் அனைத்து யுத்தங்களினதும் தாய் எனக் கருதிய ஆணையிறவு சண்டை ஆரம்பித்து ஒரு வாரத்தினுள் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய, சஜித்தின் விவாத அழைப்பை தவிர்த்து தப்பிச் செல்வது ஆச்சரியமான ஒன்றல்ல. காரணம் அவர் அன்றும் இன்றும் பயத்தினால் தப்பி ஓடுவதேயாகும்”

சஜித்தின் சவால்!

தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் ட்வீட்டர் பதிவொன்றை வெளியிட்டு பின்வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்,

“எமது கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேசுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நான் நேருக்கு நேர் மோதும் தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். பலமிக்க வேட்பாளராயின் எதிர்த்தரப்பினருடன் ஒரே மேடையில்  கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு எவ்வித அச்சமும் இருக்கக் கூடாது”

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி