இலங்கையின் ஜனநாயகத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவினாலும், அவருக்குப் பின்னாலிருக்கும் அடிப்படைவாத சக்திகளினாலும் தோன்றியிருக்கும் தெளிவான

ஆபத்தைக் கருத்திற் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு அதிகூடிய வாய்ப்புள்ள அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழு தமது கட்சி ஆதரவாளர்களிடமும், நாட்டு மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரான  ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தேசிய அமைப்பாளர் பதவியை வகிக்கும் ஐக்கிய இடதுசாரி முன்னணி இதற்கு முன்னர்  தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவிற்கு வாக்களித்து கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு கூடிய வாய்ப்புள்ள வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவதற்கு தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும் நேற்று முன்தினம் (23) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது கீழ் வரும் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

“இலங்கையின் ஜனநாயகத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவினாலும்,  அவருக்குப் பின்னாலிருக்கும் அடிப்படைவாத சக்திகளாலும் தோன்றியிருக்கும் தெளிவான ஆபத்தைக் கருத்திற் கொண்ட ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழு கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிக்கக் கூடிய அதிக வாய்ப்புள்ள அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய இடதுசாரி முன்னணியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கட்சி ஆதரவாளர்களிடமும், நாட்டு மக்களிடமும் வேண்டுகோள் விடுப்பது”

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி