மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்

அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு இதை அறிவித்தார்.

இது தொடர்பில் உத்தியோகபூர்வமற்ற மட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இம்மாதம் 23ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளமை குறி்பபிடத்தக்கது.(TrueCeylon)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி