மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் வியாபாரி

´குடு சலிந்து´ எனப்படும் சலிந்து மல்ஷிக நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் நிலைப்பாட்டை எதிர்வரும் 20 ஆம் திகதி அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சலிந்து மல்ஷிகவின் தாயாரால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இந்த உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி