நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியினால் மேற்கொள்ளப்பட்டது

கடினமான தீர்மானம் என்றும், அந்த தீர்மானம் தொடர்பில் சில பிரதேச தலைவர்கள் விரக்தியில் உள்ளதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர்களுக்கு பணம் மற்றும் பதவிகளை வழங்கி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்குத் தெரிவு செய்ய வேண்டியது சமமான கருத்துக்களையுடைய கட்சி என்பதால்  பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு தீர்மானித்ததாகவும் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா கடந்த 04ம் திகதி கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அழைத்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் ஒரு சில அமைப்பாளர்களைத் தவிற ஏனைய அனைத்து அமைப்பாளர்களும் மொட்டு கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

(மூலம் - லங்கா சீ நிவுஸ்)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி