இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.


குறித்த வரி 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு கிலோகிராம் ஒன்றின் மீது 50 ரூபா விசேட பண்ட வரியாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரியானது, நேற்று முதல் ஆறு மாதங்களுக்கு அமுலாகும் வகையில் விதிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை இன்று (புதன்கிழமை) முதல் குறைக்கப்படும் என செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறிக்கப்படும் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

இதனையடுத்து, ன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கோதுமை மாவன் விலை குறைப்புடன், கொத்து விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொத்து ரொட்டியின் விலை எவ்வளவு ரூபாவினால் குறைக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொத்து ரொட்டியின் விலை குறைப்பு தொடர்பில் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் உரிய விலைகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி