Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வடக்கில் 70 வீதமான நிலங்களை அரச நிறுவனங்கள் அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு!

T

The Leader Desk

பிப்ரவரி 25, 2022 • 6:19 AM

வடக்கில் 70 வீதமான நிலங்களை அரச நிறுவனங்கள் அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24 ) தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் எஞ்சியுள்ள 30 வீதமான நிலத்தில் தான் மக்கள் வாழ்து வருகின்றனர்.
  • வடக்கில் 44 வீதமான காணிகள் வன இலாக்கா திணைக்களத்தின் கீழ் உள்ளது.
  • அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிப்பாளர் நாயகத்தின் முன்மொழிவுக்கு அமைய 7091.6 ஹெக்டேயர் நிலங்களை பாதுகாக்கப்பட்ட வனமாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் விடுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24 ) தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் எஞ்சியுள்ள 30 வீதமான நிலத்தில் தான் மக்கள் வாழ்து வருகின்றனர். தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக நாம் ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி மகஜர் கையளிக்க இருந்த நிலையில் அதனை பெற்றுக்கொள்ள ஜனாதிபதியே அல்லது தகுதி வாய்ந்த அமைச்சர்களோ ஆர்ப்பாட்ட இடத்துக்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.


வடக்கில் 44 வீதமான காணிகள் வன இலாக்கா திணைக்களத்தின் கீழ் உள்ளது. 392164.6 ஹெக்டேயர் நிலங்கள் இவ்வாறு வன இலாக்கா திணைக்களத்தின் கீழ் உள்ளது.


அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிப்பாளர் நாயகத்தின் முன்மொழிவுக்கு அமைய 7091.6 ஹெக்டேயர் நிலங்களை பாதுகாக்கப்பட்ட வனமாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் விடுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும் எமது எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதத்தையும் உரிய அமைச்சிற்கு கையளித்திருந்தேன்.


தான் மக்கள் வாழ்கின்ற 30 வீதமான நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது, மேய்ச்சலுக்கு பயன்படுத்த முடியாது பாரிய சிக்கல்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.


மகாவலி அதிகார சபையினால் வவுனியாவில் 28 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களை குடியேற்றியுள்ளனர்.
நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் எமது நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளுக்கே எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...