இந்திய மீன்பிடித்துறை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை

உள்ளிட்ட குழுவினர், தனி விமானம் மூலம் இன்று பலாலி சர்வதேச விமான நிலையம் உடாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.

இந்தியாவால் யாழ். நகரில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

இந்நிகழ்வு, நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரதமர் தினேஸ் கணவர்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விதுர விக்கிரமநாயக்க, இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய அரச குழுவினர், 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.

இவர்களை வரவேற்க, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி