ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளராக பலமும் ஆற்றலும் மிக்க ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தானே முதலில்

தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கெலிஓயாவில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளராக பலமும் ஆற்றலும் மிக்க ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தானே முதலில் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கெலிஓயாவில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,  ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாராளுமன்றத்திலும் கூட போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

எதிர்கட்சியினர் பின் கதவால் ஆட்சியொன்றை அமைத்துக் கொண்டு சபாநாயகரின் கதிரைக்கு தண்ணீர் ஊற்றினர். மேலும் அதனை உடைக்கும் முற்படும்போது தடுக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிளகாய் தூளை வீசினர். நானும் 25 வருட காலமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்து வந்துள்ளேன். ஆனால், இம்மாதிரியான மோசமான குழப்ப நடவடிக்கைகளில் இதற்கு முன்னர் எவரும் ஈடுபட்டதில்லை. அன்று நாங்கள் கதியற்றவர்களாக இருந்தோம். எனினும், நீதிமன்றத்தின் முன்னிலையில் போராடி மீண்டும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடிந்தது. ஐக்கிய தேசிய கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. நான் வேரொரு கட்சியின் தலைவர் என்ற வகையில் செயற்பட்டதால் எதையும் சுதந்திரமாக கதைக்க முடிந்தது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் புதிய சக்தியும் ஆற்றலும் கொண்ட ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை முதன் முதலில் வெளிப்படையாக எடுத்துரைத்தேன். 

எமது அரசாங்கம் 19 ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டுவந்ததன் மூலம் சுயாதீன நீதி சேவை உருவாக்க முடிந்தது. கோட்டாபாயவின் அமெரிக்கா விசா தொடர்பான விவகாரத்தையடுத்து எதிர்கட்சியினரும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.எதிர்வரும் 17ஆம் திகதி மக்கள் நீதிமன்றத்தில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக நியமித்து தீர்ப்பளிக்கும் மேலும் எமது அரசாங்கம் ஊடகத்துறைக்கான பூரண சுதந்திரத்தை வழங்கியதுடன் இலஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு எதிராகவும், செயற்படவும் முடிந்தது. 

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் 11மில்லியன் ரூபாய்களை வங்கியில் தடுத்து நிறுத்தவும் முடிந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் பிரசார நடவடிக்கைகளில் பாரிய குறைபாடுகள் காணப்பட்டாலும், நாம் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளோம். 

கண்டி மாவட்டத்தில் மட்டும் எமது அமைச்சின் மூலம் நீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக 100பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்துள்ளோம். சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பயனடையக் கூடிய இலங்கையில் மிகப் பெரிய நீர் வழங்கல் திட்டத்தை கண்டி வடக்கு பாததும்பர பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளோம். மேலும் 2 இலட்சம் குடும்பங்கள் பயனடையக் கூடிய வகையில் 24000 மில்லியன் ரூபாய் இந்திய உதவித்திட்டத்தின் மூலம் குண்டசாலை - ஹாரகம குடிநீர் திட்டத்தை ஆரம்பித்தோம். அதேபோல் கலஹா – தெல்தொட்ட பிரதேசத்திற்காக வேறொரு நீர் வழங்கல் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். உயர் கல்வி துறை முன்னேற்றத்திற்காக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் சம்பளத்தையும், கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்கச் செய்வதற்காக நடவடிக்கை எடுத்தோம். இந்த அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 100க்கு 107வீதத்தால் அதிகரிக்கச் செய்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தொரடந்தும் உரை நிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாஸ தனது தந்தையின் மத்திய கொழும்பு தொகுதியை விட்டுவிட்டு ராஜபக்~ குடும்பத்தினரின் கோட்டையாக விளங்கும் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு சென்று சாதனைப் படைத்தார். அதேபோல் முழு நாட்டிலும் உள்ள மக்களை வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெறுவார். 1988ஆம் வருடத்தின் வடக்கிலும் தெற்கிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் உச்ச கட்டத்தில் இருந்த வேளையில் ரனசிங்க பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதவியுடன் வெற்றி கொள்ள முடிந்தது போலவே சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதை எமது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி